~~~ அர்த்தமுள்ள இஸ்லாம் ~~~

Sunday, September 10, 2006

இறையச்சம்
ஹஜ்ஜூப் பெருநாளின் போது ஆடு, மாடு ஒட்டகங்கள் வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ இரத்தமோ ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.
நிச்சயமாக அவற்றின் இரத்தங்களோ மாமிசங்களோ இறைவனைச் சென்றடைவதில்லை. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்- அல்குர்ஆன் 22:37
இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இறைவனுக்காக எனது உயிர், உடல் அனைத்தையும் தியாகம் செய்வேன் . அதன் அடையாளமாகவே இதைப் பலியிடுகிறேன். இறைவனுக்காக - சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக என் உயிரைத் தியாகம் செய்யும் நிலை ஏற்பட்;டால் அதற்கு நான் தயார் என்ற பயிற்சியைப் பெறாமல் அறுத்துப் பலியிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை .
இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத்தான்.
திருட்டுத் தொழிலில் ஈடுபவனுக்கு திருட்டு ஒரு தவறான தொழில் என்பது நன்றாகத்தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது இன்ன பிறமோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவைதான் என்பதும் அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும். தவறு எனத் தெரிந்து கொண்டுதான் அவற்றைச் செய்து வருகின்றனர்.
இத்தகையோரிடம் அவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன. இத்தகைய தொழில்களையச் செயவ்தால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும். ? இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன ? இதுதான் அந்தக் கேள்வி.
உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள், சிறையில் வாட வேண்டி வரும். அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள் ! என்று தான் அவனிடம் கூற முடியும். அவனிடத்தில் இதற்கு
மறுப்பு தயாராக இருக்கின்றது.
நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது. நூறுமுறை நான் திருடினால் ஒருமுறை பிடிபடுவதே சந்தேகம். நூறு திருடர்களில் ஓரிருவர் தாம் பிடிபடுவர். பலமுறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார் என்று அவன் கூறுவான்.
அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன், அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன் என்பான்.
இவற்றையெல்லாம் மீறிச்சிறையில் தள்ளப்டபட்டாலும் நான் செத்துவிடப் போவதில்லை வெளியில் இருந்தபோது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.
திருட்டுத் தொழில் உள்ளிட்ட , குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி எற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம் . இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன ? என்ற கேள்விக்கு எந்த விடையும் யாராலும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடை அளிக்கின்றது.
சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனை யாராலும் ஏமாற்றவோ விலை பேசவோ முடியாது உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிருத்தப் படுவார்கள் . தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான் என்று இஸ்லாம் கூறுகிறது. இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபடமாட்டான். அவனையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.
இதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட வசகனத்தைப் பாருங்கள்! நன்மை என்பது கிழக்கையோ, மேற்கையோ நோக்குவதில் அல்லது இது போன்ற புறச் சடங்குகளில் கிடையாது. மாறாக நன்மை என்பது அல்லாஹ்வையும் , நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புவது தான் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். அல்லாஹ்வையும், நியாயத் தீர்ப்பு நாளையும் ஒருவன் நம்பி அதற்கு அஞ்சி இவ்வுலகில் ஒழுங்காக வாழ வேண்டும் இதுதான் நன்மை. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கும் இதில் விடையிருக்கிறது அல்லாஹ்வையும் அவன் நியாயமான தீர்ப்பு வழங்கக் கூடிய நாளையும் நம்பி அந்நாளில் குற்றம் புரிந்தோருக்கு தப்ப இயலாத தண்டனை உண்டு நன்மை செய்தோருக்கு மகத்தான பரிசு உண்டு. என்பதையும் நம்பக்கூடியவன் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டான்.
இறைவனது கட்டளைப்படி நடப்பதன் மூலம் தான் மனிதன் இவ்வுலகிலும் நல்வாழ்வு வாழமுடியும். மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்றால் இறைவனது கட்டளைகள எப்படி அறிந்து கொள்வது.
கடவுள் மனிதன் மீது மேலாடி அருள்வாக்குக் கூறுவதாக மக்களை ஏமாற்றும் மதகுருக்கள் வழியாகவா ? கனவில் வந்து கடவுள் கட்டளையிட்டார் என்று ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள் வழியாகவா ? எந்த வழியில் இறைவன் மனிதர்களுக்குத் தன் கட்டளைகளைத் தெரிவிக்கிறான்.
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றாமல் கொண்ட கொள்கையில் கடைசிவரை உறுதியுடன் திகழ்ந்த தன்னலம் மறந்து மக்களுக்காகவே வாழ்ந்த நல்லொழுக்கம், நன்னடத்தை நற்பண்புகள் ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்டிருந்த நல்லவர்களை இறைவன் தன் தூதுவர்களாகத் தேர்வு செய்து வானவர்கள் வழியாக அவர்களுக்கு வேதங்களை வழங்கினான். அந்த வரிசையில் இறுதித் தூதராக நபிகள் நாயகத்தை தேர்வு செய்து குர்ஆன் எனும் அற்புத வேதத்தை வழங்கினான்.அதில் தனது கட்டளைகளை
இறைவன் தெளிவாக விளக்கினான்.
வானவர்கள் மூலம் இறைத் தூதர்களுக்கு இறைவன் வழங்கிய வேதங்கள். வழியாக மட்டுமே இறைவனது கட்டளைகளை மனிதன் அறிந்து கொள்ள முடியும்.
மக்களை ஏமாற்றித் தங்களை வளர்த்துக்கொள்ளும் மதகுருமார்கள் வழியாக அதை அறியமுடியாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.
நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேத்தையும், நபிமார்களையும் நம்புவதுதான் என்று இந்த வசனத்தில் இறைவன் இதைத்தான் குறிப்பிடுகிறான்.
கடவுளை மற! முனிதனை நினை! என்று நாத்திகம் பேசுவோரின் வாதத்தையும் மனிதனை மறந்து விட்டு கடவுளை நினை என்று கூறும் போலி ஆத்திகர்களின் வாதத்தையும் இஸ்லாம் முற்றாக மறுக்கின்றது.
கடவுளையும் நினைக்க வேண்டும். அதே நேரத்தில் மனிதனையும் நினைக்க வேண்டும் ஒன்றை மறந்து விட்டுத்தான் இன்னொன்றை அடைய வேண்டுமென்பதில்லை.இரண்டையும் ஒரே நேரத்தில் நினைக்க முடியும் இறைவன் மனிதனுக்கு எதிரி அல்லன். மனிதனை நினைக்கும் வழியை இறைவனைத் தவிர வேறு எவரும் சொல்லித்தர முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
இதனால் தான் '' நன்மை என்பது '' . . . செல்வத்தில் விருப்பமிருந்தாலும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளை விடுவிப்பதற்காகவும் செல்வத்தை வாரி வழங்குவது தான்.'' என்று இறைவன் கூறுகிறான்.

0 Comments:

Post a Comment

<< Home