~~~ அர்த்தமுள்ள இஸ்லாம் ~~~

Sunday, September 10, 2006

வாக்குறுதி

நன்மை என்பது-வாக்களித்தால் அதை நிறைவேற்றுவதாகும் என்று இறைவன் கூறுகின்றான்.98

அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்காக எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அவற்றில் ஒரு சதவிகிதத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றுவதில்லை. மதங்கள் மக்களுக்கு தீங்கிழைக்கக் கூடியவை என்று பிரச்சாரம் செய்வோரிடமும் இந்த வாக்கு மீறல் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றது. சராசரி மனிதர்களும் கூட அப்போதைக்குத் தப்பித்துக் கொள்வதற்காக வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றி வருகின்றனர்.

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே வாக்குறுதி வழங்கும் தன்மையைப் பெற்றுள்ளான். மனிதனுக்கு தனிச்சிறப்பாக வழங்கப்பட்ட இந்தத் தீமையை மனிதன் கேவலப் படுத்துகிறான். தனது சொல்லை - தனது எதிர்பார்ப்பை - தனக்கு கீழே உள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனிதன் வாக்குறுதியை மீறும்போது தனது சொல்லைத் தானே அவமதித்தவனாக ஆகின்றான். பிறருக்கு ஆசையூட்டி ஏமாற்றியவனாக ஆகின்றான்.
நன்மையை நாடுபவன் - உண்மை முஸ்லிம் - தான் அளிக்கின்ற வாக்குறுதி எத்தணை கடினமானதாக இருந்தாலும் நிறைவேற்றுவான் . அதனால் எத்தனை இழப்புக்கள் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டான் வெறும் சடங்குகளையும் புறச்செயல்களையும் மட்டுமே நிறைவேற்றி விட்டு மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையானால் அவன் முழுமையாக நல்லறம் செய்தவன் என்று இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
(உண்மை முஸ்லிம்களாகிய) அவர்கள் தம்மிடம் அடைக்கலப் பொருட்களையும் தமது வாக்குறுதிகளையும் பேணி நடப்பர் (அல்குர்ஆன் 23:8) வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் ! நிச்சயமாக வாக்குறுதிகளும் விசாரிக்கப்பட உள்ளன . (அல்குர்ஆன் 17:34)
வாக்குகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவது சிறப்புக்குரிய ஒரு காரியம் என்று மட்டும் இஸ்லாம் கூறவில்லை. மாறாக அது ஒரு கட்டாயக் கடமை . அதை நிறைவேற்றாவிட்டால் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அது பற்றியும் விசாரிப்பான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு வாக்குறுதியளிக்கின்றான் .அதை நிறைவேற்றுவதிலோ நிறைவேற்றாமலிருப்பதிலோ கடவுளுக்கு சம்பந்தம் இல்லை. அப்படித்தான் எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதனுக்கு மனிதன் அளிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதையும் விசாரனை செய்து நீதி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கடவுளை மறந்துவிட்டு மனிதனை நினைக்கச் சொல்பவர்கள் நிறைவேற்றாத - நிறைவேற்ற நினைக்காத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கிறோம்.
கடவுளை நினைத்து அவனுக்குப் பயந்து நடக்கும் முஸ்லிம்கள், மனிதனுக்கு அளித்த வாக்குறதிகளையும் நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு காரணம் இறைவன் அதை ஒரு கடமையாக்கியிருப்பது தான்.
பொய் பேசுவதும் அமானித மோசடி செய்வதும் வாக்கு மீறுவதும் சந்தர்ப்ப வாதிகளின் அடையாளம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து (புகாரி)
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணரலாம். முத்தாய்ப்பாக மிக முக்கியமான நன்மையை இறைவன் சொல்லித் தருகின்றான்


0 Comments:

Post a Comment

<< Home